டக்ளஸ் தேவானந்தவுக்கு 9 வரை விளக்கமறியல்!

கைது செய்யப்பட்ட முன்னாள் கடற்றொழில் அமைச்சரும்,ஈழமக்கள் ஜனநாயக காட்சியின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தா எதிர்வரும் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் கடற்றொழில் அமைச்சர் டக்களஸ் தேவானந்தா கடந்த 26 ஆம் திகதி குற்றப்புலனாய்வு திணைக்களத்தால் கைது செய்யப்பட்டிருந்தார்.

நீதிமன்ற உத்தரவின்பேரில் 72 மணித்தியாலங்கள் தடுப்புக்காவலில் வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார்.

இந்த நிலையில், நேற்றைய தினம்(29) கம்பஹா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது அவரை எதிர்வரும் ஜனவரி மாதம் 9 திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Exit mobile version