தையிட்டிக்கு விஜயம் செய்த நயினாதீவு விகாராதிபதி!

நயினாதீவு ரஜமகா விகாரையின் விகாராதிபதி தலைமையிலான தேரர்கள், தையிட்டி திஸ்ஸ விகாரைப் பகுதிக்கு இன்று(02) விஜயம் செய்து காணி உரிமையாளர்களோடு கலந்துரையாடினர்.

சட்டவிரோதமாக தனியார் காணிகளில் தையிட்டி விகாரை அமைக்கப்பட்டதால் பாதிக்கப்பட்ட காணி உரிமையாளர்கள் நயினாதீவு விகாரதிபதியை அண்மையில் நேரில் சந்தித்து தமது காணிகளை விடுவிப்பது தொடர்பாக கலந்துரையாடியிருந்தனர்.

இதனொரு கட்டமாக தையிட்டிக்கு இன்று நேரடி விஜயம் மேற்கொண்ட நயினாதீவு விகாரதிபதி காணி உரிமையாளர்களோடு கலந்துரையாடியதோடு திஸ்ஸ விகாரைக்கென ஏற்கனவே ஒதுக்கப்பட்ட காணியை பார்வையிட்டுச் சென்றார்.

Exit mobile version