பலாலி விமான நிலையம் ஒருநாளில் அதிகளவான விமானங்களை கையாண்டு சாதனை!

யாழ்ப்பாணம் பலாலி சர்வதேச விமான நிலையம் ஒரே நாளில் அதிக எண்ணிக்கையான பயணிகள் விமானங்களை கையாண்டு நேற்று(03) புதிய சாதனையை படைத்துள்ளது.

இண்டிகோ நிறுவனத்தின் இரண்டு சர்வதேச விமானங்களும், சினமன் எயர் மற்றும் டிபி ஏவியேசன் நிறுவனங்களின், 5 உள்நாட்டு வணிக விமானங்களும் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக பயணங்களை மேற்கொண்டுள்ளன.

யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம் ஆரம்பிக்கப்பட்ட பின்னர், அதிகபட்ச பயணிகள் விமானங்கள் நேற்றைய தினமே இயக்கப்பட்டுள்ளன.

இதன்போது ஒரே நேரத்தில் சென்னை மற்றும் திருச்சியில் இருந்து யாழ்ப்பாணம் வந்த இன்டிகோ விமானங்களும், கொழும்பில் இருந்து வந்த சிறிய பயணிகள் விமானமும் ஒரே நேரத்தில் பலாலி விமான நிலையத்தில் தரித்து நின்றிருந்தன.

Exit mobile version