தையிட்டியில் போராடியவர்களுக்கு பிணை: பெப்ரவரி 26 க்கு தவணை!

யாழ்.தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள சட்ட விரோத விகாரைக்கு எதிராக போராடியவர்களுக்கு எதிராக பொலிஸாரால் தெடுக்கப்பட்ட வழக்கில், சந்தேக நபர்களை பிணையில் விடுவித்துள்ளதோடு, வழக்கை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 26 ஆம் திகதிக்கு நீதிமன்றம் தவணையிட்டுள்ளது.

குறித்த வழக்கு மல்லாக நீதவான் நீதிமன்றத்தில் இன்று(05) எடுத்துக் கொள்ளப்பட்டபோதே நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்தது.

தையிட்டி விகாரைக்கு முன்பாக கடந்த வாரம், அமைதி வழியில் போராட்டத்தில் ஈடுபட்ட வேலன்சுவாமிகள், வலி. கிழக்கு மற்றும் வலி. வடக்கு பிரதேச சபைகளின் தவிசாளர்கள் உட்பட 15 பேருக்கு எதிராக பலாலி பொலிஸாரால் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கு இன்று (05) எடுத்துக் கொள்ளப்பட்டபோது, சந்தேகநபர்கள் சார்பாக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன், சிரேஷ்ட சட்.டத்தரணி என்.ஸ்ரீகாந்தா, சட்டத்தரணி கலாநிதி குருபரன் ஆகியோர் ஆஜராகியிருந்தர்.

Exit mobile version