ஊர்காவற்றுறை – யாழ்ப்பாணம் அரச பொதுப் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்து சபை பேருந்தின் சாரதி ஒருவர்
மதுபோதையில் பேருந்தை செலுத்திச் சென்ற நிலையில் ஊர்காவற்றுறை பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று (4) மாலை 4.30 மணயளவில் யாழ் – ஊர்காவற்றுறை வீதியின் அல்லைப்பிட்டி பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான ஊர்காவற்றுறை – யாழ்ப்பாணம் இடையிலான சேவையை முன்னெடுக்கும் வழித்தடம் 777 இலக்க பேருந்தை செலுத்திச் சென்ற சாரதியே குறித்த சம்பவத்தின் போது கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த அரச பேருந்து அதி வேகத்தில் அதிகளவான பயணிகளுடன் செல்வதை அவதானித்த ஊர்காவற்றுறை போக்குவரத்துப் பொலிஸார் பேருந்தை வழிமறித்து சோதனையிட்டுள்ளனர்.
சோதனையின் போது சாரதியிடம் சாரதி அனுமதிப் பத்திரம் இல்லாதிருந்துள்ளது. அத்துடன் அவர் நிறை போதையில் இருந்ததை அவதானித்த பொலிஸார் அவரை மது போதையில் சாரதித்துவம் செய்தமை மற்றும் சாரதி அனுமதிப்பத்திரம் இன்மை உள்ளிட்ட காரணங்களுக்காக கைது செய்து ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துள்ளனர்.
அதனையடுத்து இன்றைய தினம் ஊர்காவற்றுறை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளனர்.

திரையுலகில் மிளிரும்ஷன்சனா பாலசூரிய!
மிகச்சிறந்த தடகள வீராங்கனையாக திகழும் அமாஷி டி சில்வா!
மாணவர்களுக்கு 15 முதல் சீருடைகள்!
அர்ச்சுனா எம்பிக்கு இடைக்கால தடை!