ருஹூணு பல்கலைக்கழக விவசாய பீடத்தின் இரண்டாம்,மூன்றாம் வருட மாணவர்கள் பீடத்திற்குள் நுழைவதற்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளதோடு,
விடுதிகளை விட்டு வெளியேறுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.
ருஹூணு பல்கலைக்கழக விவசாய பீடத்தின் இரண்டு மாணவர் குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் 06 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதனையடுத்து குறித்த மோதலில் ஈடுபட்ட 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்ற நிலையில், இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Follow Us



