இலங்கைவடக்கு மாகாணம்

வடக்கின் போர் நாளை ஆரம்பம்!

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும், யாழ்ப்பாணம் பரியோவன் கல்லூரிகளுக்கும் இடையிலான “வடக்கின் போர்” என அழைக்கப்படும் மாபெரும் துடுப்பாட்ட போட்டி நாளை(05) ஆரம்பமாகவுள்ளது.

119 தடவையாக இடம்பெறும் இந்த துடுப்பாட்டப்போட்டி, யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் 5 ஆம், 6ஆம்,7ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளது.

அதன்பின்னர், மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்களைக் கொண்ட ஒருநாள் போட்டி 23 ஆவது தடவையாக இடம்பெறவுள்ளது.

இந்தப்போட்டி எதிர்வரும் 14 ஆம் திகதி பரியோவான் கல்லூரி மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

வரலாற்று பாரம்பரியம் கொண்ட முதலாவது வடக்கின் போர் கிரிக்கெட் தொடர், 1904 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.

இதுவரை இடம்பெற்ற 118 போட்டிகளில் புனித பரியோவான் கல்லூரி 40 போட்டிகளிலும், யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி 29 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.

40 போட்டிகள் வெற்றி தோல்விகள் இன்றி நிறைவடை ந்தன.

7 போட்டிகளுக்கான முடிவு கிடைக்கப் பெறவில்லை என்பதும், ஒரு போட்டி இடைநடுவில் கைவிடப் பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button