இலங்கைஉலகம்வடக்கு மாகாணம்
Trending
காங்கேசன்துறை - நாகப்பட்டினம் இடையிலான சிவகங்கை கப்பல் சேவை மீண்டும் ஆரம்பம்!
காங்கேசன்துறை – நாகப்பட்டினம் இடையிலான ‘சிவகங்கை’ பயணிகள் கப்பல் சேவை எதிர்வரும் 6 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.
காங்கேசன்துறை – நாகப்பட்டினம் இடையேயான கப்பல் சேவை காலநிலை சீரின்மை மற்றும் பிற காரணங்கள் காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
தற்போது அனைத்து நடவடிக்கைகளும் பூர்த்தியடைந்துள்ள நிலையில், எதிர்வரும் 06 ஆம் திகதி முதல் சேவை இடம்பெறவுள்ளது.
கப்பல் சேவைக்கான பயணச் சீட்டு முன்பதிவுகள் மற்றும் பயண நேர அட்டவணைகள்
தொடர்பான மேலதிக விவரங்களை அதன் உத்தியோகபூர்வ இணைய தளம் அல்லது அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் ஊடாகப் பெற்று கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
Follow Us



