
பத்தரமுல்ல – அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணியும், அவரது மனைவியும் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தோடு தொடர்புடைய ஆயுததாரி ஒருவர் இனங்காணப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று(20) உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
துப்பாக்கிக்சூடு நடாத்தியவர் ருக்ஹாவெல பகுதியில் வசிக்கும் ரூபர்ட் சுரேஷ் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
ஆயுததாரிகள் குற்றத்தை செய்வதற்கு முன்னர் அவர்களை தங்குமிடத்திற்கு அழைத்து வந்த வாகனத்தைக் கண்டறிவதற்கான விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும், அதன் உரிமையளரை தற்போது இனங்கண்டுள்ளதாகவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால குறிப்பிட்டார்.
Follow Us



