அமெரிக்காவால் இலங்கைக்கு வழங்கப்படவுள்ள நான்காவது கடலோர பாதுகாப்பு கப்பல் அமெரிக்காவிலிருந்து இலங்கையை நோக்கி இன்று(21) பயணித்துள்ளது.
அமெரிக்க பசுபிக் கடற்படையின் தளபதி அட்மிரல் ஸ்டீபன் தோமஸ் கோஹ்லர் இந்த தகவலகத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க பசிபிக் கடற்படை தளபதி ( Steve Koehler) அட்மிரல் ஸ்டீவ் “வெப்” கோலர், மூன்றுநாள் உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்று முன்தினம் (19) இலங்கை வந்துள்ளார்.
அவரது இந்த வருகை இலங்கைக்கான இரண்டாவது வருகையாக அமைந்துள்ளது.
இந்த விஜயத்தின்போது அவர், வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர, இலங்கை கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் காஞ்சன பானகொட ஆகியோரைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

பிரித்தானிய இளநிலை வெளிவிகார அமைச்சராக உமா குமரன் நியமனம்!
ஈரான் மீதான தாக்குதலை தற்காலிகமாக இடை நிறுத்திய டொனால்ட் ட்ரம்ப்!
வலப்பனையில் காட்டுத் தீ பரவல்:10 ஏக்கருக்கும் அதிகமான வனப்பகுதி தீக்கிரை!
சிம்பாவே – இந்திய அணிகளிடையிலான 2ஆவது T20 இல் இந்தியா வெற்றி!