அரசாங்கத்தின் நகர அபிவிருத்தி திட்டத்தில் யாழ்ப்பாணமும் முல்லைத்தீவும்!

அரசாங்கத்தின் நகர அபிவிருத்தி திட்டத்தின் கீழ்,முதற்கட்டமாக நாடு முழுவதும் 20 நகரங்கள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயச்சந்திரமூர்த்தி றஜீவன் தெரிவித்தார்.

அது தொடர்பாக கருத்து தெரிவித்த அவர், “யாழ்ப்பாண மாவட்டத்தில் இரண்டு நகரங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன. நெல்லியடி நகரமும் மானிப்பாய் நகரமும் விரைவில் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன.

அதேபோன்று முல்லைத்தீவு மாவட்டத்தில் முல்லைத்தீவு நகரமும் இத்திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.

இந்த நகர அபிவிருத்தி திட்டத்தின் மூலம் மக்களின் வாழ்வாதார நிலை உயர்வதோடு, வர்த்தக, போக்குவரத்து, உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும்.

படிப்படியாக நாட்டின் ஏனைய பகுதிகளிலும் நகர அபிவிருத்தி திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதுடன் சமநிலையான பிராந்திய அபிவிருத்தியை உறுதி செய்வதே அரசாங்கத்தின் நோக்கமாகும்” – என்றார்.

Swing Ad
Tamil World Radio Ad
↑
Exit mobile version