இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் புதிய தலைவியாக ஸ்மிருதி மந்தனா நியமனம்!

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் புதிய தலைவியாக ஸ்மிருதி மந்தனா நியமிக்கப்பட்டுள்ளார்.

ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமை பதவியில் இருந்து விலகியதைத் தொடர்ந்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை, ஸ்மிருதி மந்தனாவை அணியின் புதிய தலைவியாக அறிவித்துள்ளது.

ஸ்மிருதி மந்தனா, 2013ஆம் ஆண்டு முதல் இந்திய அணியில் விளையாடி வருகிறார்.

அவர் பல ஆண்டுகளாக இந்திய அணியின் துணைத் தலைவியாகவும் செயல்பட்டு வந்துள்ளார்.

இதற்கு முன்பு இந்திய அணியை 18 T20I போட்டிகளிலும், 4 ஒருநாள் போட்டிகளிலும் தலைவியாக வழிநடத்தியுள்ளார்.

உள்நாட்டு மற்றும் ஃபிரான்சைஸ் கிரிக்கெட்டிலும் அவரது தலைமைத்துவ திறமை வெளிப்பட்டுள்ளது.

குறிப்பாக, Royal Challengers Bengaluru அணியை 2024 மற்றும் 2026ஆம் ஆண்டுகளில் Women’s Premier League செம்பியன் பட்டத்திற்கு வழிநடத்தியுள்ளார்.

இந்த நிலையில், இந்திய அணியை வழிநடத்தும் பொறுப்பு தனக்கு கிடைத்திருப்பது மிகப்பெரிய கெளரவம் என மந்தனா தெரிவித்துள்ளார்.

Swing Ad
Tamil World Radio Ad
↑
Exit mobile version