இலங்கை
Trending

இயக்கச்சியில் இராணுவத்திற்காக காணி சுவீகரிப்பு: மக்கள் போராட்டத்தால் இடைநிறுத்தம்!

கிளிநொச்சி பச்சிளைப்பள்ளி இயக்கச்சியிலுள்ள நான்காவது இலங்கை மின்னியந்திர இராணுவ முகாமிற்கான காணி அளவீடு மக்கள் போராட்டத்தால் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

தனியாருக்கு சொந்தமான 17 காணிகளை அளவீடு செய்வதற்காக நில அளவையாளர்கள் இன்று(02) வருகைதந்திருந்தனர்.

இதன்போதுஒகாணி உரிமையாளர்கள், அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டு நில அளவீட்டுக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.

இந்தப் போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வராசா கஜேந்திரன், முருகேசு சந்திரகுமார்,

பச்சிளைப்பள்ளி மற்றும் தவிசாளர் கரைச்சி பிரதேச சபைகளின் தவிசாளர்கள் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button