இவ்வருடத்தின் ஜூன் மாதத்தில் நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
கடந்த வருடத்தின் ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில், இது 9.9 வீத வீழ்ச்சி கண்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, ஜூன் மாதத்தில் நாட்டிற்கு வருகை தந்துள்ள ஒட்டுமொத்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஒரு லட்சத்து முப்பத்தெட்டாயிரத்து 241 ஆகும் என அந்த அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.
ஜூன் மாதத்தில் நாற்பத்து மூவாயிரத்து 423 இந்திய சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதுடன், இது மொத்த சுற்றுலாப் பயணிகளின் வருகையில் 35% என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கடந்த மாதத்தில் பிரித்தானியாவில் இருந்து பத்தாயிரத்து 474 சுற்றுலாப் பயணிகளும், அவுஸ்திரேலியாவிலிருந்து எண்ணாயிரத்து 710 பேரும், சீனாவிலிருந்து எண்ணாயிரத்து 224 பேரும் மற்றும் அமெரிக்காவிலிருந்து மூவாயிரத்து 806 சுற்றுலாப் பயணிகளும் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.

சீனா மற்றும் ரஷ்ய தலைவர்கள் சந்திப்பு!
மீண்டும் மீண்டும் குற்றங்களில் ஈடுபடுவோருக்கான சட்டத்தைத் திருத்த அமைச்சரவை அனுமதி!
முன்னாள் அமைச்சர் பியங்கர ஜயரத்னவுக்கு 7 வருட கடூழிய சிறைத்தண்டனை!
பணின் விலை 10 ரூபாவால் அதிகரிப்பு!