எரிபொருள் விலைகள் நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளன.
அதற்கமைய, ‘இலங்கை பொற்றொலிய கூட்டுத்தாபனம்’ தனது எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
ஒக்டேன் 92 பெற்றோல்,24 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு, அதன் புதிய விலை 317 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஒக்டேன் 95 பெற்றோல் 25 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு, அதன் புதிய விலை 365 ரூபாவாக நிர்மணிக்கப்பட்டுள்ளது.
ஓட்டோ டீசல் 22 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு, அதன் புதிய விலை 303 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சுப்பர் டீசல் 24 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு, அதன்புதிய விலை 353 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மண்ணெண்ணெய்13 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு, அதன் புதிய விலை 195 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இலங்கையில் எரிபொருட்களை விற்பனை செய்யும் Lanka IOC மற்றும் Sinopec Energy Lanka ஆகிய நிறுவனங்கள் இதுவரை தங்களது விலை திருத்தம் தொடர்பான அறிவிப்பை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

எரிபொருள் ஏற்றிய இரண்டு கப்பல்கள் நாளை மற்றும் நாளை மறுதினங்களில் இலங்கை வரும்!
கொழும்பில் உணவகத்தில் ஏற்பட்ட தீயால் மூவர் பலி: ஒருவர் வைத்தியசாலையில்!
காங்கேசன்துறை முதல் கற்பிட்டிவரை கடலுக்கு செல்லவேண்டாம் என எச்சரிக்கை!
நீர்கொழும்பில்ரயிலுடன் முச்சக்கரவண்டி மோதுண்டதில் இருவர் பலி!