இலங்கைவடக்கு மாகாணம்

யாழுக்கு 20 க்கு 20  உலக கிண்ணம்  கொண்டுவருகை!

இலங்கை மற்றும் இந்திய நாடுகள் இணைந்து நடாத்தும் 20 க்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான வெற்றி கிண்ணம் யாழ்ப்பாணத்துக்கு இன்று (01) வாகன பேரணியாக எடுத்து வரப்பட்டது.

இலங்கையின் பல்வேறு நகரங்களுக்களுக்கும் உலகக் கிண்ணம், எடுத்துச் செல்லப்பட்டுவரும் நிலையில், இன்று வடக்குக்கு எடுத்து வரப்பட்டுள்ளது.

அந்தவகையில் இன்று பிற்பகலில் யாழ்.மாவட்ட செயலகத்துக்கு உலகக் கிண்ணம் எடுத்துவரப்பட்டது.

யாழ் .மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கலப்பு பண்பாட்டு நடனத்தை தொடர்ந்து வெற்றிக் கிண்ணம் காட்சிப்படுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து நல்லூர் ஆலய முன்றலில் வெற்றிக் எடுத்துவரப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டது.

அதனைத்தொடர்ந்து துரையப்பா விளையாட்டரங்கிலும், அதனைத்தொடர்ந்து யாழ்.கேட்டையிலும், அதனைத் தொடர்ந்து யாழ்.பொது நூலகத்திலும் காட்சிப்படுத்தப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button