சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தினம் யாழ்.தந்தை செல்வா கலையரங்கில் இன்று ( 30) இடம்பெற்றது.
முன்னதாக காலை 9.00 மணியளவில், “நீதிக்கான நீள் பயணம்” யாழ். முற்றவெளி தமிழாராட்சி மாநாட்டு படுகொலை நினைவு முற்றத்திலிருந்து ஆரம்பமாகி வைத்தியசாலை வீதியூடாக மாகாத்மா காந்தி வீதியைச் சென்றடைந்து அங்கிருந்து தந்தை செல்வா கலையரங்கை வந்தடைந்தது.

அதனைத் தொடர்ந்து தந்தை செல்வா கலையரங்கில், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களை நினைவு கூர்ந்து சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில், உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றை வலியுறுத்தி இடம்பெற்ற இந்த மாநாட்டில், யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள், பொது அமைப்புகள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபைப் பிரதிநிகள் எனப் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

மாநாட்டில் ” அழிக்கப்படும் சாட்சியங்கள்” பகுதி 2 நூலும், “உள்நாட்டு பொறிமுறையை நிராகரிக்கிறோம்” என்ற நூலும் இதன்போது வெளிட்டு வைக்கப்பட்டன.
இறுதியாக “வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் நினைவுகள்” கண்காட்சியும் இடம்பெற்றது.

கண்காட்சியை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வலிந்து காணாமல் ஆக்கப்படுதல் தொடர்பான பணிக்குழுவின் உறுப்பினர் அனா லொரேனா டெல்ஹாபெல்லா பேரேஸ் நாடாவெட்டி ஆரம்பித்து வைத்தார்.


வெல்லே சாரங்க துயாயில் கைது!
வர்த்தகர்கள் பொருள் கொள்வனவு ஆவணங்களை வைத்திருப்பது அவசியம்: தவறின் சட்ட நடவடிக்கை!
யோஷித ,மற்றும் கரன்னாகொடவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்!
அருட்தந்தை ஜிம் பிறவுண் உள்ளிட்ட 22 பேரின் 20ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு!