இலங்கைஉலகம்
Trending

க.பொ.த.உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின!

க.பொ.த.உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின!

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொது தராதர உயர்தர பரீட்சைப் பெறுபேறுகள் வெளிவந்துள்ளன.

வெளியாகியுள்ள உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைய, பௌதீக விஞ்ஞான பாடத்தில் தமிழ் மொழிமூலம் கிளிநொச்சி மகா வித்தியாலய மாணவன் முதலிடம் பெற்றுள்ளார்.

கிளிநொச்சி மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த தெய்வேந்திரன் திருக்குமரன் என்ற மாணவனே அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்றுள்ளார்.

இதேவேளை, வணிகப் பிரிவில் மட்டக்களப்பு, காத்தான்குடி மகா வித்தியாலய மாணவன் மொஹமட் சுபைதீன் மொஹமட் பர்தான், அகில இலங்கை ரீதியில் தமிழ் மொழி மூலம் முதலாம் இடத்தை பெற்றுள்ளார்.

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் நேற்றிரவு வெளியிடப்பட்டன.

இதற்கமைய, இந்த பெறுபேறுகளை www.doenets.lk என்ற இணையத்தளத்தில் பார்வையிட முடியும்.

வெளிவந்துள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கு இரண்டு இலட்சத்து 81 ஆயிரத்து 810 மாணவர்கள் தோற்றியிருந்தனர்.

இந்த நிலையில் வெளியிடப்பட்டுள்ள பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில், ஒரு இலட்சத்து 76 ஆயிரத்து 527 மாணவர்கள் பல்கலைக்கழகத்துக்கு விண்ணப்பிக்கத் தகுதி பெற்றுள்ளதாகப் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதனிடையே, பரீட்சை மோசடிகள் அல்லது ஏனைய காரணங்களுக்காக, 111 பரீட்சார்த்திகளின் பெறுபேறுகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

பெறுபேறுகள் தொடர்பாகத் திருப்தியடையாத மாணவர்கள், தமது விடைத்தாள்களை மறுசீராய்வு செய்வதற்கு விண்ணப்பிக்க முடியும்.

இதற்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் 06 ஆம் திகதி முதல் 22 ஆம் திகதி வரை பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் ஊடாக மாத்திரம் ஏற்றுக்கொள்ளப்படும் எனப் பரீட்சைத் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button