நடந்து முடிந்த க.பொ.த சாதாரண தர பரீட்சை விடைதாள்கள் திருத்தும் பணிகள் நாளை (12) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் ஏ.கே.சுபாஷினி இந்திக்ககுமாரி லியனகே தெரிவித்தார்.
இந்தப் பரீட்சை விடை தாள்கள் திருத்தம் பணிகள் இரு கட்டங்களாக இடம் பெறவுள்ளன.
முதலாம் கட்டம் நாளை 12 ஆம் திகதி முதல் 23 வரை இடம்பெறவுள்ளது.
இரண்டாம் கட்டம், எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் 10 ஆம் திகதி வரை இடம்பெற உள்ளது.
இதேவேளை, க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளை ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதிக்கு பின்னர் வெளியிட எதிர்பார்த்திருப்பதாக பரீட்சை ஆணையாளர் ஏ.கே.சுபாஷினி இந்திக்ககுமாரி லியனகே குறிப்பிட்டார்.

யாழுக்கு மூன்றுநாள் விஜயமாக வருகைதந்துள்ள கியூபா தூதுவர்!
யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம்!
கொக்குவில் பிரம்படிப் படுகொலையின் 39ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு!
வங்காள விரிகுடாவில் தாழமுக்கம்: மீனவர்களுக்கு விசேட எச்சரிக்கை!