வவுனியா மாநகர சபை முதல்வர் காண்டீபன், சாவகச்சேரி நகரசபை உபதவிசாளர் கிஷோர் ஆகியோரின் பதவி மற்றும் உறுப்புரிமை வடக்கு ஆளுநரால் நீக்கப்பட்டமைக்கு ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் பங்காளி கட்சி தலைவரும் ஊடகப் பேச்சாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் கண்டனம் வெளியிட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இன்று(25) இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இந்த கண்டணத்தை வெளியிட்டுள்ளார்.
அரியரத்தினம் என்பவர் தலைமையில் தனிநபர் ஆணைக்குழு அமைக்கப்பட்டு அந்த குழுவின் சிபார்சின் பேரிலேயே நடவடிக்கை எடுத்ததாக ஆளுநர் கூறியுளார்.
ஆனால், என்ன காரணங்களுக்காக இருவரையும் நீக்கியதாக சம்பந்தப்பட்டவர்களுக்கு இதுவரை அறிவிக்கப்படவில்லை எனவும் அவர் இதன்போது கேள்வி எழுப்பினார்.
இதேவேளை நாடாளுமன்றில் நேற்று கொண்டாடப்பட்ட “சுற்றுச்சூழல் சட்டம் மூலம்” மாகாண சபைகளின் அதிகாரங்கள் பறிப்பதாக அமையும் எனவும் சுரேஸ் பிரேமச்சந்திரன் சுட்டிக்காட்டினார்.

வடகொரியாவின் மிகப்பெரிய அதிநவீனப் போர்க்கப்பல் கடற்படையில் சேர்ப்பு!
வேலையற்ற பட்டதாரிகள் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தின் முன்பாக போராட்டம்!
வவுனியா நகரசபை மேஜர்,சாவகச்சேரி நகரசபை உப தவிசாளர் ஆகியோர் ஆளுநரால் பதவி நீக்கம்!
கொழும்பு கடவத்தையில் விபத்து :ஒருவர் பலி!