வரி செலுத்துநர் அடையாள இலக்கம் (TIN) பெற இதுவரை காலவரையறை விதிக்கப்படவில்லை என யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்தார்.
வரி செலுத்துநர் அடையாள இலக்கத்தைப் பெற்றுக்கொள்வதற்காக யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதியில் அமைந்துள்ள உள்நாட்டு இறைவரி திணைக்கள அலுவலகத்தில் அண்மைய நாட்களாக பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.
அதனையடுத்து யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர், இறைவரி திணைக்கள பிராந்திய ஆணையாளரோடு தொலைபேசி ஊடாக கலந்துரையாடிய பின்னர் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும், வரி செலுத்துநர் அடையாள இலக்கமானது யூன் மாதம் 30 ஆம் திகதிக்கு முன்னர் பெற்றுக் கொள்ளப்பட வேண்டும் என எவ்விதமான காலவரையறையும் இதுவரை நிர்ணயிக்கப்படவில்லை எனவும்,
வரி செலுத்துநர் அடையாள இலக்கத்தினைப் பெற்றுக் கொள்வதற்காக உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தால் எவ்வித கட்டணமும் அறவிடப்படமாட்டாதெனவும்,
ஏற்கனவே வரி செலுத்துநர் அடையாள இலக்கம் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டிருப்பின் உரியவர் தனது தேசிய அடையாள அட்டையைக் காண்பித்து சான்றிதழைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும்,
வரி செலுத்துநர் அடையாள இலக்கம் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டிருக்காவிடின் www.ird.gov.lk என்ற Online பதிவு மூலமாகவோ, உள்நாட்டு இறைவரித் திணைகள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து சமர்பிப்பதன் மூலமாகவோ பெற்றுக்கொள்ள முடியும் எனவும் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் குறிப்பிட்டார்.

சாவகச்சேரி நகரசபை உப தவிசாளரை நீக்கியமையை கண்டித்து சாவகச்சேரியில் கடையடைப்பு போராட்டம்!
வெனிசுலாவில் இரட்டை நிலநடுக்கத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 235 ஆக உயர்வு!
வவுனியா மாநகர சபை முதல்வர், சாவகச்சேரி நகரசபை உபதவிசாளர் பதவி நீக்கப்பட்டமைக்கு சுரேஷ் பிரேமச்சந்திரன் கண்டனம்!
வடகொரியாவின் மிகப்பெரிய அதிநவீனப் போர்க்கப்பல் கடற்படையில் சேர்ப்பு!