நாடு தழுவிய ரீதியில் சட்டத்தரணிகள் இன்று(16) நீதிமன்ற நடவடிக்கைகளைப் பகிஷ்கரித்துள்ளனர்.
தலங்கம, அக்குரேகொட பகுதியில்
சட்டத்தரணி ஒருவரும், அவரது மனைவியும் நேற்று முன்தினம்(14) ஆயுத்தாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தனர்.
அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், துப்பாக்கிதாரிகளை கைது செய்யக் கோரியும் இந்தப் பகிஷ்கரிப்பு இடம்பெற்றுவருகிறது.



இதேவேளை, யாழ்.குடாநாட்டிலுள்ள நீதிமன்றங்களில் சட்டத்தரணிகளும் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அதன்காரணமாக யாழ்ப்பாணம், சாவகச்சேரி, மல்லாகம், பருத்தித்துறை மற்றும் ஊர்காவற்றுறை ஆகிய நீதிமன்றங்களின் சட்டத்தரணிகளும் மன்றுக்கு வருகைதரவில்லை.

இதன் காரணமாக நீதிமன்ற வழக்குகள் சட்டத்தரணிகள் இன்றி அழைக்கப்பட்டதோடு, வழக்குகள் திகதியிடப்பட்டன.

வடக்கு ஆளுநர் யாழ்.மாவட்ட புதிய கட்டளைத் தளபதி சந்திப்பு!
இலங்கைக்கான வெளிநாடுகளின் உயர்தானிகர்கள் மற்றும் தூதுவர்கள் நியமனம்!
கீரிமலை கடலில் மூழ்கி குடும்பஸ்தர் பலி!
கொடிகாமம் பசுக்கேணி பரமசுவன் ஆலய மகா கும்பாபிசேகம்!