
சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்ற இரண்டு டிப்பர் வாகனங்களை வெடிவைத்துக் கைப்பற்றிய விசேட அதிரடிப்படையினர், அதன் சாரதிகள் இருவரையும் கைது செய்துள்ளனர்.
இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம், கொடிகாமம், மீசாலை வடக்கு புத்தூர் வீதியில் நேற்றிரவு(14) 11.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
கொடிகாமம் கெற்பேலி பகுதியிலிருந்து மூன்று டிப்பர் வாகனங்கள் சட்டவிரோதமாக மணல் ஏற்றியவாறு பயணிப்பதாக விசேட அதிரடிப் படையினருக்குத் தகவல் கிடைத்துள்ளது.
அதனையடுத்து விரைந்து செயற்பட்ட அதிரடிப்படையினர், மீசாலை – புத்தூர் வீதி பூதவராயர் கோவிலடியில் டிப்பர் வாகனங்களை வழிமறித்துள்ளனர்.

இருந்தும் சமிஞ்ஞைகளை பொருட்படுத்தாது குறித்த டிப்பர் வாகனங்கள் அதிரடிப்படையினரின் வாகனத்தை முட்டித்தள்ளியதோடு நிறுத்தாமல் சென்றன.
அதனையடுத்து டிப்பர்களின் சில்லுகளுக்கு வெடிவைத்த அதிரடிப்படையினர், இரண்டு டிப்பர்களையும், அதன் சாரதிகள் இருவரையும் கைது செய்து கொடிகாமம் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
ஒரு டிப்பர் வாகனமும் சாரதியும் தப்பிச் சென்றுள்ள நிலையில் அதனை கைப்பற்றும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் கைதானவர்களையும் டிப்பர் வாகனங்களையும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த கொடிகாமம் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

13ஆவது வாரமாக தொடரும் பலாலி மக்களின் காணிவிடுவிப்பு போராட்டம்!
செம்மணி மனிதப் புதைகுழிக்கு நீதி கோரி யாழில் ஆர்ப்பாட்டப் பேரணி!
தேர்தல் வாக்குறுதிகளை அரசு நிறைவேற்றவில்லை எனத் தெரிவித்து சாவகச்சேரியில் உண்ணாவிரதப் போராட்டம்!
யாழ்.துன்னாலை கொலை தொடர்பாக மூவர் கைது!