தேர்தல் வாக்குறுதிகளை அரசு நிறைவேற்றவில்லை எனத் தெரிவித்து சாவகச்சேரியில் உண்ணாவிரதப் போராட்டம்!

தேர்தல் வாக்குறுதிகளை அரசு நிறைவேற்றவில்லை எனத் தெரிவித்து
யாழ் சாவகச்சேரி நகர் பேருந்து நிலையத்தில் உண்ணாவிரதப் போராட்டம் இன்று(12) முன்னெடுக்கப்பட்டது.

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் ஏற்பாட்டில் இந்த உண்ணாவிரத போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

“காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கும்,செம்மணி மனித புதைகுழிக்கும் சர்வதேச விசாரணை வேண்டும்”, “உள்ளூராட்சி சபைகளை முடக்கும் பிரஜா சக்தி முறைமை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்”, “இராணுவத்தின் வசமுள்ள அனைத்து காணிகளும் உடனடியாக உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்”, ” எஞ்சியுள்ள அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும்”

ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து இந்த உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இன்று காலை 7.00 மணியளவில் ஆரம்பமாகிய போராட்டம், மாலை 5.00 மணி வரை இடம்பெற்றது.

இந்தப் போராட்டத்தில் அரசியல் கட்சிகளின் தலைவர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், காணிகளை இழந்த மக்கள், அரசியல் கைதிகளின் குடும்பத்தினர், பொது மக்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

Swing Ad
Tamil World Radio Ad
Exit mobile version