செம்மணி மனிதப் புதைகுழிக்கு நீதி கோரி யாழில் ஆர்ப்பாட்டப் பேரணி!

யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகள் சர்வதேச ரீதியில் முன்னெடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி தமிழ் தேசிய பேரவையின் ஏற்பாட்டில் யாழில் இன்று (13) ஆர்ப்பாட்டப் பேரணி இடம்பெற்றதுழ

நல்லூர் கைலாச பிள்ளையார் கோவில் அருகாமையிலுள்ள ஐக்கிய நாடுகளின் தொண்டு நிறுவன காரியாலய முன்றலிலிருந்து போராட்டம் ஆரம்பமானது.

அங்கிருந்து பேரணியாக கிட்டு பூங்கா வரை பேரணி இடம்பெற்று அங்கு கூட்டம் இடம்பெற்றது.

செம்மணி மனிதப் புதைகுழி விசாரணை சர்வதேசத்தின் அனுசரடையுடன் முன்னெடுக்கப்பட வேண்டும் என இதன்போது வலியுறுத்தப்பட்டது.

இந்த ஆர்ப்பட்டபேரணியில் அரசியல் கட்சிகளின் தலைவர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், மதகுருமார்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Swing Ad
Tamil World Radio Ad
Exit mobile version