சாள்-து-கோல் கப்பலை தாக்க முற்பட்ட தானியங்கி ரோன் ரஷ்யாவினுடையது: சுவீடன் குற்றச்சாட்டு!

சுவீடனின் மல்மியூ (Malmö) பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த அதிநவீன விமான தாங்கி இராணுவக் கப்பல், சாள்-து-கோல் மீது தாக்குதல் மேற்கொள்ள முயற்சித்த தானியங்கி ரோன் ரஷ்யாவினுடையது என சுவீடன் குற்றஞ்சாட்டியுள்ளது.

கடந்த 26 ஆம் திகதி குறித்த கப்பல் மீது தானியங்கி ட்ரோன் ஒன்று தாக்குதல் மேற்கொள்ள முற்பட்டது.

இருந்தும் 10 கிலோமீற்றர் தூரத்தில் வைத்து சுவீடன் இராணுவத்தால் குறித்த தானியங்கி ட்ரோன் சுட்டு வீழ்த்தப்பட்டது.

இந்த நிலையில்,
குறித்த ட்ரோன் ரஷ்யாவால், ரஷ்ய கப்பல் ஒன்றிலிருந்து ஏவப்பட்டதென சுவீடன் குற்றஞ்சாட்டியுள்ளது.

சம்பவ நேரத்தில் ரஷ்ய புலனாய்வுக் கப்பலான ஜிகுலேவ்ஸ்க், சுவீடனை அண்டிய கடற்பிராந்தியத்தில் பயணித்துக் கொண்டிருந்ததாகவும் சுவீடன் சுட்டிக்காட்டியுள்ளது.

Exit mobile version