சுவிஸ் நிறுவனங்கள்ட்ரம்ப் நிர்வாகத்துக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகம் விதித்த வரிக்கு எதிராக சுவிட்சர்லாந்து நிறுவனங்கள் சட்ட நடவடிக்கை எடுக்க ஆரம்பித்துள்ளன.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகம் விதித்த இறக்குமதி வரிகள் சட்ட விரோதமானவை என அமெரிக்க உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.

அதனைத் தொடர்ந்து சுவிட்சர்லாந்து நிறுவனங்கள் இந்த சட்ட நடவடிக்கையில் இறங்கியுள்ளன.

இதனால், வரிகளாக அறவவிடப்பட்ட தொகைகளை திரும்பப் பெறும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

பிரபலமான சுவிஸ் இராணுவக் கத்தி தயாரிப்பு நிறுவனம் Victorinox மத்திரம், 4 மில்லியன் அமெரிக்க டொலர் திருப்பித் தரப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது.

இதேபோல் கடிகார உற்பத்தி துறையில் முன்னணியிலுள்ள Swatch மற்றும் Breitling ஆகிய நிறுவனங்களும் சட்டரீதியான நடவடிக்கைக்கு தயாராகியுள்ளன.

மருந்து தயாரிப்பு நிறுவனங்கள், சொக்லேட் உற்பத்தியாளர்கள் மற்றும் ஆடம்பரப் பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்களும் இதேபோன்ற கோரிக்கைகளை முன்வைக்கத் திட்டமிட்டுள்ளன.

சர்வதேச அளவில் இந்த விவகாரத்தில் அமெரிக்கா திருப்பிச் செலுத்த வேண்டிய மொத்த தொகை 175 பில்லியன் டொலர் வரை இருக்கலாம் என பென்ஸில்வேனியா பல்கலைக்கழக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version