சாவகச்சேரி நகரசபையின் பாதீடு 11 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சபை ஆரம்பத்தில், நாட்டில் அண்மையில் இடம்பெற்ற இயற்கை அனர்த்தத்தால் உயிரிழந்த மக்களுக்கு சபையில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து சாவகச்சேரி நகரசபையின் 2026 ஆம் ஆண்டுக்கான பாதீட்டை தவிசாளர் வடிவேல் ஸ்ரீபிரகாஸ் இன்று(22) சபையில் சமர்ப்பித்து உரையாற்றினார்.
தொடராக, பாதீடு தொடர்பான வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றன.

இதன்போது பாதீட்டுக்கு ஆதரவாக 14 உறுப்பினர்கள் வாக்களித்தனர்.
தமிழரசுக் கட்சியின் 06 உறுப்பினர்களும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் 05 உறுப்பினர்களும், ஜனநாய க தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 02(இரு) உறுப்பினர்களும், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் ஒரு உறுப்பினரும் ஆதரவாக வாக்களித்தனர்.
எதிராக தேசிய மக்கள் சக்தியின் 3 உறுப்பினர்கள் வாக்களித்தனர்.
18 உறுப்பினர்களை கொண்ட சாவகச்சேரி நகர சபையில், அகில இலங்கை தமிழ் காங்கிராஸின் 06 உறுப்பினர்களில் ஒரு உறுப்பினர் நீதிமன்ற உத்தரவின்பேரில் நீக்கப்பட எஞ்சியிருந்த 05 உறுப்பினர்களைக் கொண்டும், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் இரு உறுப்பினர்களைக் கொண்ளோடும் குலுக்கல் முறை மூலம் ஆட்சியமைக்கப்பட்டது.

அதனடிப்படையில், அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் வடிவேல் ஸ்ரீபிரகாஸ் தவிசாளராகவும், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஞானப்பிரகாசம் கிசோர் உப தவிசாளராகவும் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.
அந்த நிலையில், இன்றைய தினம் சமர்ப்பிக்கப்பட்ட பாதீடு மேலதிக 11 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

புகையிரத திணைக்கள இணையத்தளம் மீது சைபர் தாக்குதல்!
யாழ்.மாவட்டச் செயலகம் முன்பாக காணிகளை விடுவிக்கக்கோரி போராட்டம்!
மாகாண மட்ட குத்துச் சண்டைப் போட்டியில் சென் பற்றிக்ஸ் கல்லூரிக்கு மூன்று தங்கமும், ஒரு வெள்ளியும்!
மண்சரிவு மஞ்சள் எச்சரிக்கை நாட்டின் மூன்று மாவட்டங்களுக்கு விடுப்பு!