சிறுமி டினோஜாவின் மரணத்துக்கு நீதிகோரி முல்லைத்தீவு வைத்தியசாலை முன்பாக போராட்டம்!

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சையின் போது உயிரிழந்த சிறுமி டினோஜாவுக்கு நீதி கோரி முல்லைத்தீவு வைத்தியசாலை முன்பாக இன்று( 29) போராட்டம் இடம்பெற்றது.

குகநேசன் டினோஜா என்கின்ற 12 வயதுடைய சிறுமி திடீர் சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.வபின்னர் கடந்த 21ஆம் திகதி அவர் உயிரிழந்திருந்தார்.

மருத்துவத் தவறு காரணமாகவே சிறுமி உயிரிழந்துள்ளார் என சிறுமியின் உறவினர் குற்றஞ் சாட்டிவருகின்றனர்.

இது தொடர்பாக முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெற்ற ஒருங்கிணைப்பு கூட்டங்களில் விவாதிக்கப்பட்டதோடு மேலதிக விசாரணையும் இடம் பெற்றுவருகிறது.

இந்நிலையில் சிறுமியின் மரணத்துக்கு நீதிகோரி வைத்தியசாலைக்கு முன்பாக இன்று போராட்டம் இடம்பெற்றது.

Exit mobile version