சீனா மற்றும் ரஷ்ய தலைவர்கள் சந்திப்பு!

கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கெக்கில் நடைபெற்று வரும் ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டின் இடையே சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதினும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

சர்வதேச அளவில் நிச்சயமற்ற தன்மைகள் அதிகரித்து வரும் சூழலில் இரண்டு நாடுகளுக்குடையேயான மூலோபாயக் கூட்டணி மேலும் வலுப்படுத்தப்பட்டுள்ளதாக அவர்கள் இதன்போது தெரிவித்துள்ளனர்.

கடந்த மே மாதமும் இருவரும் சந்தித்து கலந்துரையாடிய நிலையில் மீண்டும் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

சர்வதேச ஒழுங்கில் நிச்சயமற்ற தன்மைகள் அதிகரித்திருந்தாலும் பீய்ஜிங் மற்றும் மொஸ்கோ இடையேயான உறவுகள் மேலும் உறுதியடைந்துள்ளதாக ஜின்பிங் குறிப்பிட்டார்.

யுக்ரைன் மீது ரஷ்யா நடத்திவரும் போர் ஐந்தாவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள நிலையிலும், இரு நாடுகளுக்குடையேயான ஒத்துழைப்பு அனைத்து துறைகளிலும் வெற்றிகரமாக வளர்ந்து வருவதாக புடின் தெரிவித்தார்.

இந்த இரண்டு நாள் உச்சி மாநாடு பிராந்திய பாதுகாப்பு மற்றும் பொருளாதார அமைப்பான ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் 25 ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கிறது.

இதில் ஈரான் ஜனாதிபதி மசூத் பெசஷ்கியன் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரீப் மற்றும் துருக்கி ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்துவான் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

Swing Ad
Tamil World Radio Ad
Exit mobile version