செம்மணி மனிதப் புதைகுழி மூன்றாம் கட்ட அகழ்வு ஏப்ரல் 20 முதல்!

யாழ்.செம்மணி சிந்துபாத்தி மனித புதைகுழி மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி முன்னெடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

செம்மணி மனித புதைகுழி வழக்கு யாழ். நீதவான் நீதிமன்றில் நேற்று (12) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

அதன்போது, நல்லூர் பிரதேச சபை, புதைகுழியை சூழவுள்ள பகுதிகளை வாரத்தில் இரண்டு தினங்கள் துப்பரவு செய்யவேண்டும் என பணிப்புரை விடுக்கப்பட்டது.

மேலும், அகழ்வு பணிகளில் ஈடுபடுவர்கள் தங்க மற்றும் பொருட்களை வைப்பதற்கான அமைக்கப்பட்ட கொட்டகைகள் அழிவடைந்தமையால் அவற்றை மீளவும் அமைக்குமாறும் மன்று பணிப்புரை விடுத்தது.

அதனைத் தொடர்ந்து குறித்த வழக்கு ஏப்ரல் மாதம் 8 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

அதன்பின்னர், நீதவான் எஸ்.லெனின்குமார், சட்ட வைத்திய அதிகாரி எஸ்.பிரணவன், சட்டத்தரணிகளான நிரஞ்சன், ரணித்தா, நல்லூர் பிரதே சபை செயலாளர் உள்ளிட்டோர் நேற்று(12) புதைகுழியை நேரில் சென்று பார்வையிட்டனர்.

Swing Ad
Tamil World Radio Ad
↑
Exit mobile version