பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சொல்லிசைப் பாடகர் சங்கீத்சனை விடுதலை செய்யக் கோரி யாழ். வடமராட்சி வல்வெட்டித்துறை சந்தியில் இன்று(08) போராட்டம் இடம்பெற்றது.
வல்வெட்டித்துறை சமூக ஆர்வலர்கள், இளைஞர்களின் ஏற்பாட்டில் இந்தப் போராட்டம் இடம்பெற்றது.
இதன்போது சங்கீத்சனை விடுதலை செய்யக் கோரியும், பயங்கரவாத தடை சட்டத்தை முற்றாக நீக்கக் கோரியும், கோசங்கள் எழுப்பப்பட்டன.
இந்தப் போராட்டத்தில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன், வலிகாமம் கிழக்கு பிரதேசசபை தவிசாளர் தியாகராசா நிரோஷ்,
வலிகாமம் கிழக்கு பிரதேச சபை உப தவிசாளர் தர்மலிங்கம் ஜனார்த்தனன், வல்வெட்டித்துறை நகரசபை உறுப்பினர்கள், அரசியல் செயற்பாட்டாளர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

கொழும்பு மெகசினில் நேற்றிரவு பதற்றம்: நிலைமை கட்டுப்பாட்டுக்குள்!
சாவகச்சேரி வாரிவனம் முத்துமாரியம்மன் இன்று தேர்!
நல்லூரான் வடக்கு வாயில்அலங்கார தோரணை வளைவு திறந்து வைப்பு!
செம்மணி சிந்துபாத்தி மனிதப் புதைகுழி வளாகத்தில் இடம்பெற்ற திறந்த நீதிமன்ற அமர்வு: எட்டு என்புக் கூடுகள் நேற்றும் மீட்பு!