சோமாலியாவின் வட கிழக்குக் கடற்கரைக்கு அருகில் பயணித்துக் கொண்டிருந்த எண்ணெய் கப்பலையும் அதிலிருந்த மாலுமிகளையும் சோமாலிய கடன்கொள்ளையர்கள் கடத்தியுள்ளனர்.
18 ஆயிரத்து 500 மெற்றிக் தொன் எரிபொருளையும், கப்பலிலிருந்த 17 மாலுமிகளையும் சோமாலிய கடற்கொள்ளையர்கள் கடத்தியுள்ளனர்.
ஹானர் 25 என அடையாளம் காணப்பட்ட குறித்த கப்பல், கடந்த புதன்கிழமை இரவு கடற்கரையிலிருந்து சுமார் 30 கடல் மைல் தொலைவில் தரித்து நின்றபோது ஆயுதம் ஏந்திய ஆறு போர் கொண்ட கடற் கொள்ளையர்களால் கடத்தற்பட்டுள்ளனர்.
ஷாஃபூன் மற்றும் பந்தர் பெய்லா ஆகிய மீன்பிடி நகரங்களுக்கு இடையே, சோமாலியக் கடற்கரைக்கு அருகே அந்தக் கப்பல் தற்போது நங்கூரமிடப்பட்டுள்ளதாக புன்ட்லாந்து அதிகாரிகளை மேற்கோள் காட்டி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சவூதி அரேபியாவின் போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய ஹூதி அமைப்பு!
பயணிகளோடு காணாமல் போன கப்பல் கண்டுபிடிப்பு: 140 பேர் மாயம் :ஒருவர் பலி!
ஆசிய மகளிர் உலக கிண்ண கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இலங்கை – இந்திய அணிகள் இன்று களத்தில்!
பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு நுழைந்த இலங்கை மகளிர் அணி!