இலங்கை
Trending

ஜனவரி முதல் 6 இலட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை!

இலங்கைக்கு இந்த வருடத்தில் 6 இலட்சத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.

ஜனவரி முதலாம் திகதி முதல் மார்ச் 11 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் மொத்தம் 6 இலட்சத்து
23 ஆயிரத்து 651 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில் குறித்த காலப்பகுதியில், இந்தியாவில் இருந்து ஒரு இலட்டத்து 15 ஆயிரத்து 772 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.

பிரித்தானியாவில் இருந்து 66 ஆயிரத்து 164 சுற்றுலாப் பயணிகளும், ரஷ்யாவில் இருந்து 56 ஆயிரத்து 114 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.

ஜேர்மனியில் இருந்து 45 ஆயிரத்து
939 சுற்றுலாப் பயணிகளும், சீனாவில் இருந்து 39 ஆயிரத்து 725 சற்றுலாப் பயணிகளும் பயணிகளும் வருகை தந்துள்ளனர்.

மேலும், பிரான்ஸ், அவுஸ்திரேலியா மற்றும் நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளிலிருந்தும் பெருமளவிலான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button