ஜப்பானில் திருட்டில் ஈடுபட்ட இலங்கை இளைஞர் கைது!

ஜப்பானின் டோக்கியோவில் திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டதாக இலங்கை இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

30 வயதான ஜெயதுங்க ஆராச்சி சிரேஜ் தனுஷ்க என்பவரே கைது செய்யப்பட்டுள்ளதாக ஜப்பானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

குறித்த இலங்கையர் கடந்த டிசம்பர் 21ஆம் திகதி, பெண் ஒருவரைத் தாக்கி அவரிடமிருந்த கடன் அட்டை உட்பட்ட பொருட்களை களவாடியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதன்போது பாதிக்கப்பட்ட பெண்ணின் கழுத்து மற்றும் ஏனைய பகுதிகளில் காயங்கள் ஏற்பட்டுள்ளன.

சந்தேகநபரான இலங்கை இளைஞர் தம்மீதான குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

Exit mobile version