ஈரானின் IRIS DENA கப்பல் மூழ்கடிக்கப்பட்ட போது உயிரிழந்த 84 ஈரானிய கடற்படை வீரர்களின் சடலங்கள், ஈரானிய தூதரக அதிகாரிகளிடம் இன்று(13) ஒப்படைக்கப்பட்டன.
இலங்கையை அண்டிய கடற் பரப்பில் தரித்து நின்ற ஈரானின் IRIS DENA கப்பல் அமெரிக்க நீர் மூழ்கிக் கப்பலால் கடந்த 4ஆம் திகதி மூழ்கடிக்கப்பட்டிருந்தது.
அதனையடுத்து இலங்கை கடற்படை, அதிலிருந்த 32 பேரை உயிருடன் மீட்டு காலி கராப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதித்திருந்தது.
அதன்பின்னர் மீட்க்கப்பட்ட 84 பேருடைய சடலங்கள் காலி கராப்பிட்டி தேசிய வைத்தியசாலைக் குளிரூட்டி அறைகளில் வைக்கப்பட்டிருந்தன.
இந்த நிலையில், காலி பிரதம நீதிவான், குறித்த சடலங்களை ஈரான் தூதரகத்திடம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டிருந்தார்.
அதற்கமைய ஈரானிய கடற்படை வீரர்களது 84 சடலங்களும் இன்று(13) ஈரானிய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டன.

யாழ் நகர அபிவிருத்தி தொடர்பாக ஆராய்ந்தபிரதி அமைச்சர் எரங்க குணசேகர!
வசந்த கரன்னாகொட, யோஷிதவுக்கு எதிரான ஊழல் வழக்கில் முன்விளக்க மாநாட்டிற்கு அழைக்குமாறு உத்தரவு!
சவூதி அரேபியாவின் போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய ஹூதி அமைப்பு!
எயார்பஸ் வழக்கு: நாமல் ராஜபக்ஷவுக்கு மீண்டும் விளக்கமறியல்!