
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான விசேட பிரதிநிதியும், இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதுவருமான செர்ஜியோ கோருக்கும்(Sergio Gor) ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவிற்கும் இடையிலான சந்திப்பு இன்று(18) இடம்பெற்றுள்ளது.
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் விசேட அழைப்பின்பேரில்,
புதுடில்லி சென்றுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று இந்த சந்திப்பில் ஈடுபட்டார்.
இந்தியாவில் இடம்பெறும், AI தாக்க உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி இந்த உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.
செயற்கை நுண்ணறிவை(AI) மனிதகுலத்தின் நன்மைக்காகப் பொறுப்புணர்வோடு பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் இந்த மாநாடு நடைபெறவுள்ளது.
இந்த மாநாட்டில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நாளை 19ஆம் திகதி உரையாற்றவுள்ளார்.
அங்கு
ஐந்து நாட்கள் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் 20 நாடுகளின் அரச தலைவர்களும், 45 இற்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகளும் பங்கேற்றுள்ளனர்.
இதன்போது ஜனாதிபதி, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பல நாட்டுத் தலைவர்களுடன் இருதரப்புப் பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.



