மன்னார் பிரதான பாலத்தடியில் அமைந்துள்ள சோதனைச்சாவடியில் கடமையில் இருந்த இராணுவ சிப்பாய் ஒருவரின் துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் சிப்பாய் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் இன்று (22) காலையில் இடம்பெற்றுள்ளது.
மன்னார் சௌத்பார் இராணுவ முகாமில் கடமையாற்றும் 46 வயதுடைய இராணுவச் சிப்பாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இராணுவ வீரர்களுக்கு துப்பாக்கிகளை பரிசோதித்து விநியோகிக்க முற்பட்ட போதே குறித்த துப்பாக்கி தவறுதலாக வெடித்துள்ளது.
சம்பவத்தில் காயமடைந்த சிப்பாய், மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

வர்த்தகர்கள் பொருள் கொள்வனவு ஆவணங்களை வைத்திருப்பது அவசியம்: தவறின் சட்ட நடவடிக்கை!
காஷ்மீர் குறித்த அமெரிக்கத் தூதரின் கருத்துக்கு பாகிஸ்தான் கண்டனம்!
யோஷித ,மற்றும் கரன்னாகொடவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்!
அருட்தந்தை ஜிம் பிறவுண் உள்ளிட்ட 22 பேரின் 20ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு!