
அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், சேதமடைந்த பகுதிகளை மீளக் கட்டியெழுப்பவும் இலங்கை அரசாங்கத்தால் ஸ்தாபிக்கப்பட்டுள்ள இலங்கையை மீளமைக்கும் நிதி திட்டத்திற்கு இங்கிலாந்தில் வாழ்ந்துவரும் தொழிலதிபர் ஒருவர் பத்து மில்லியன் ரூபாயை நன்கொடையாக வழங்கியுள்ளார்.
இங்கிலாந்தில் இயங்கும் நகையகம் ஒன்றின் உரிமையாளரும், யாழின் வர்த்தகருமான வேலுப்பிள்ளை சிவசுந்தரம் என்பவரே இந்த நிதியுதவியை வழங்கியுள்ளார்.
அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் மறுசீரமைப்புப் பணிகளுக்கு வலுச்சேர்க்கும் வகையில் பத்து மில்லியன் ரூபாய்க்கான காசோலையை அவர் நேற்று (11) ஜனாதிபதியின் செயலாளர் நந்திகா சனத் குமணாயக்கவிடம் உத்தியோகபூர்வமாக கையளித்துள்ளார்.
Follow Us



