இலங்கைஉலகம்
Trending

கலஹாவில் அடையாளங்காணப்பட்டது இரத்தினக்கல் அல்லவென உறுதி!

கலஹாவில் அடையாளங்காணப்பட்டது இரத்தினக்கல் அல்லவென உறுதி!

கண்டி, கலஹா பகுதியிலுள்ள கோவிலுக்கு அருகில் இனங்காணப்பட்ட கல், சந்தை மதிப்பில்லாத சாதாரண லேப்ரடோரைட் வகையை சேர்ந்தவை என தேசிய இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரண அதிகாரசபை உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த கல் தொடர்பான பரிசோதனைகளை மேற்கொண்ட அதிகாரிகள், இது உயர்தர வணிக அல்லது சந்தை மதிப்பைக் கொண்டிருக்கவில்லை என குறிப்பிட்டுள்ளனர்.

இது லேப்ரடோரசென்ஸ் என அழைக்கப்படுகிறது. பொதுவாக நீல நிறத்தை கொண்டுள்ள இது, மற்றொரு பாறைக்குள் பொதிந்துள்ள சிறிய அளவிலான லேப்ரடோரைட் கல் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

வானவில் போன்ற காட்சி
இது பெல்ட்ஸ்பார் வகையை சேர்ந்த ஒரு கனிமமாகும். இதன் தனித்துவமான கனிம குணாதிசயங்களை எளிதாகக் கண்டறிய முடியும்.

இந்தக் கல்லின் மீது ஒளி விழும்போது ஏற்படும் வானவில் போன்ற காட்சி தரும் தோற்றத்தை கொண்டுள்ளது.

இத்தகைய தோற்றத்திற்காகவே இது பிரபலமாக அறியப்படுவதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

Swing Ad
Tamil World Radio Ad

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button