யாழ்ப்பாணம் – மன்னார் ஏ 35 வீதி, தென்மராட்சி நாவற்குழி பகுதியில் டிப்பர் வாகனம் ஒன்று பாதையை விட்டு விலகி மதிலுடன் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

இந்த சம்பவம் இன்று(15 )அதிகாலை 5.05 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
சட்டவிரோத மணல் ஏற்றி வந்த டிப்பர் வாகனம் ஒன்றே கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.

சம்பவத்தில் கிளிநொச்சி வட்டக்கச்சியை சேர்ந்த இளைஞர்கள் இருவரே உயிரிழந்துள்ளனர்.
ஒருவரது சடலம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையிலும், மற்றவரது சடலம் யாழ்.போதனா வைத்தியசாலையிலும் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

யாழ் நகர அபிவிருத்தி தொடர்பாக ஆராய்ந்தபிரதி அமைச்சர் எரங்க குணசேகர!
வசந்த கரன்னாகொட, யோஷிதவுக்கு எதிரான ஊழல் வழக்கில் முன்விளக்க மாநாட்டிற்கு அழைக்குமாறு உத்தரவு!
எயார்பஸ் வழக்கு: நாமல் ராஜபக்ஷவுக்கு மீண்டும் விளக்கமறியல்!
தமிழீழக் கோரிக்கையை எதிர்க்கும் அர்ச்சுனா எமது மேடைகளில் இருப்பதில் தவறில்லை – உதய கம்மன்பில தெரிவிப்பு!