இலங்கைவடக்கு மாகாணம்
Trending
பருத்தித்துறை கடலிலிருந்து காணமல்போன கடற்றொழிலாளர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
பருத்தித்துறை கடலிலிருந்து தொழிலுக்கு சென்று காணமல்போன கடற்றொழிலாளர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
யாழ்.வடமராட்சி வடக்கு பருத்தித்துறை கடலிலிருந்து நேற்று முன்தினமிரவு(27) படகொன்றில் தொழிலாளர்கள் இருவர் கடலுக்கு சென்றுள்ளனர்.
இதன்போது படகின் இயந்திரத்தில் தூண்டில் கயிறு சிக்கியுள்ளது.
அதனை சீர்செய்ய முற்பட்ட போது தொழிலாளர் கடலில் வீழ்ந்து காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டது.
அதனையடுத்து பருத்தித்துறை கொட்டடிப் பகுதி கடற்றொழிலாளர்கள் 25க்கு மேற்பட்ட படகுகளில் தேடுதல் நடாத்தினர்.
இந்தநிலையில் இன்று காலை 10 மணியளவில் சடலம் மீட்க்கப்பட்டது.
பருத்தித்துறை கொட்டடியைச் சேர்ந்த 23 வயதுடைய விஜயகுமார் நிக்சன் என்ற இளங்குடும்பஸ்தரே உயிரிழந்தவராவார்.
Follow Us



