பிரதமரை கல்வி அமைச்சர் பதவியிலிருந்து விலகுமாறு வலியுறுத்தி விமல் சத்தியாக்கிரகப் போராட்டம்!

பிரதமர் ஹரிணி அமரசூரியவை கல்வி அமைச்சர் பதவியிலிருந்து விலகுமாறு வலியுறுத்தி‎ முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச இன்று (12) முதல் தொடர்ச்சியான சத்தியாக்கிரக போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். 

இசுருபாயவிலுள்ள கல்வி அமைச்சுக்கு முன்பாக விமல் வீரவன்ச,இந்த சத்தியாக்கிரக போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். 

புதிய கல்வி சீர்த்திருத்தத்தை கைவிட வேண்டும் என்றும், கல்வி அமைச்சர் பிரதமர் ஹரிணி அமரசூரிய பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தி முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச தொடர்ச்சியான சத்தியாக்கிரக போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.

Exit mobile version