புத்தாண்டு காலத்தில் விசேட போக்குவரத்துச் சேவைகளை முன்னெடுத்ததன் மூலம், கடந்த 6 நாட்களில் ஒரு பில்லியன் ரூபா வருமானம் கிடைத்துள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபை தெரிவித்துள்ளது.
இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இலங்கை போக்குவரத்துச் சபையின் தலைவர் சஜீவ நந்தன கனகரத்ன இதனைத் தெரிவித்தார்.
புத்தாண்டுக்காக தமது சொந்த இடங்களுக்குச் சென்ற பொதுமக்களுக்காக வழங்கப்பட்ட விசேட பேருந்து சேவைகள் மூலம் இந்த வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் 11ஆம் திகதி இலங்கை போக்குவரத்துச் சபை வரலாற்றிலேயே ஒரே நாளில் ஈட்டப்பட்ட அதிகூடிய வருமானம் பதிவாகியுள்ளது.
அன்றைய தினம் மாத்திரம் 213 மில்லியன் ரூபா வருமானமாகப் பெறப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபையின் தலைவர் சஜீவ நந்தன கனகரத்ன குறிப்பிட்டார்.

பிரித்தானிய இளநிலை வெளிவிகார அமைச்சராக உமா குமரன் நியமனம்!
ஈரான் மீதான தாக்குதலை தற்காலிகமாக இடை நிறுத்திய டொனால்ட் ட்ரம்ப்!
வலப்பனையில் காட்டுத் தீ பரவல்:10 ஏக்கருக்கும் அதிகமான வனப்பகுதி தீக்கிரை!
சிம்பாவே – இந்திய அணிகளிடையிலான 2ஆவது T20 இல் இந்தியா வெற்றி!