பொதுமக்கள் தினமாக ஒதுக்கப்பட்டுள்ள திங்கட்கிழமைகளில் நடத்தப்படும் எந்தவொரு உத்தியோகபூர்வ கூட்டங்களிலும் நாளை(08) முதல் தங்களால் கலந்துகொள்ள முடியாது என
இலங்கை பிரதேச செயலாளர்கள் மற்றும் உதவி பிரதேச செயலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
பொதுமக்கள் தினமான திங்கட்கிழமைகளில் அமைச்சகங்கள் மற்றும் அரசியல் தலைமைகளால் நேரடி அல்லது இணைய வழிக் கூட்டங்கள் நடத்தப்படுவதால், தங்களை நாடி வரும் பொதுமக்களுக்கு பெரும் அசௌகரியங்கள் ஏற்படுவதாக சங்கம் குறிப்பிட்டுள்ளது.
அரசு நிர்வாக சுற்றறிக்கை (இலக்கம் 27/2023) இன் படி, பொதுமக்கள் தினத்தில் அதிகாரிகள் தங்களது அலுவலகங்களில் தங்கியிருந்து மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
மேலும், அந்நாளில் எந்தவொரு உத்தியோகபூர்வ கூட்டங்களையும் நடத்தக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டே இந்தத் தீர்மானம் நாளை முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக சங்கத்தின் தலைவர் ஆர். செந்தில் தெரிவித்துள்ளார்.

போர்நிறுத்த ஒப்பந்தம் மீறப்படுவதாக ஈரான் கண்டனம்!
புத்தளம்- நுரைச்சோலை பகுதியில் தலுவா முகத்துவாரத்தில் குளிக்கச் சென்ற மூவர் பலி!
யாழில் சங்கிலிய மன்னனின் 407 நினைவு தினம் அனுஷ்டிப்பு!
சுகாதார தொண்டர்கள் யாழ்.போதனா வைத்தியசாலை முன்பாக இரண்டாவது நாளாகவும் போராட்டம்!