பிலிப்பைன்ஸில் நடைபெறவுள்ள சர்வதேச மகளிர் தின நிகழ்வுகளில் பங்கேற்பதற்காகப் பிரதமர் ஹரிணி அமரசூரிய மணிலாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
ஆசிய அபிவிருத்தி வங்கியின் விசேட அழைப்பின் பேரில் பிரதமர் நேற்றிரவு(08) பிலிபைன்ஸுக்கு விஜயம் செய்ததாக பிரதமரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
மணிலாவிலுள்ள நினோய் அக்வினோ சர்வதேச விமான நிலையத்தைச் சென்றடைந்த பிரதமரை, பிலிப்பைன்ஸிற்கான இலங்கைத் தூதுவர் சானக்க தல்பஹேவா, பிலிப்பைன்ஸ் அரச உயர்மட்ட அதிகாரிகள் மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதிநிதிகள் வரவேற்றனர்.
இந்த விஜயத்தின்போது மணிலாவிலுள்ள ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைமையகத்தில் நடைபெறவுள்ள சர்வதேச மகளிர் தின விழாவில் பிரதமர் விசேட உரையாற்றவுள்ளார்.
மேலும் , பிலிப்பைன்ஸ் அமைச்சர்களோடும் பிரதமர் ஹரிணி அமரசூரிய இருதரப்புப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளார்.

யாழ் நகர அபிவிருத்தி தொடர்பாக ஆராய்ந்தபிரதி அமைச்சர் எரங்க குணசேகர!
வசந்த கரன்னாகொட, யோஷிதவுக்கு எதிரான ஊழல் வழக்கில் முன்விளக்க மாநாட்டிற்கு அழைக்குமாறு உத்தரவு!
சவூதி அரேபியாவின் போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய ஹூதி அமைப்பு!
எயார்பஸ் வழக்கு: நாமல் ராஜபக்ஷவுக்கு மீண்டும் விளக்கமறியல்!