இலங்கை
Trending

மாற்றுத்திறனாளிகளுக்கு பிரத்தியேக பேருந்து சேவை!

மாற்றுத் திறனாளிகளிக்கு பிரத்தியேக பேருந்து சேவையை ஆரம்பிக்க போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன் முதற்கட்டமாக 10 நவீன தாழ்தள குளிரூட்டப்பட்ட பேருந்துகள் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்துள்ளன.

அதற்காக, 430.7 மில்லியன் ரூபா முதலீடு செய்யப்பட்டுள்ளது.

சக்கர நாற்காலிகளைப் பயன்படுத்துவோர் இந்த பேருந்துகளில் எவ்விதத் தடையுமின்றி ஏறி இறங்கும் வகையில் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு பேருந்திலும் 33 ஆசனங்கள் உள்ளதோடு, 80 பயணிகள் வரை பயணிக்க முடியும் என தெரிவிக்கப்படுகிறது.

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button