இலங்கை
Trending

யாழில் விபத்து: வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் உட்பட மூவர் படுகாயம்!

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பயணித்த முச்சக்கர வண்டியும், கார் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் சுற்றுலாப் பயணிகள் இருவரும், முச்சக்கர வண்டிச் சாரதியும் படு காயமடைந்துள்ளனர்.

இந்த விபத்து யாழ். வேலணை மண்கும்பான் பகுதியில் இன்று (12) இடம்பெற்றுள்ளது.

பிரான்ஸ் நாட்டு சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற முச்சக்கரவண்டியே காருடன் மோதுண்டுள்ளது.

காயமடைந்த சுற்றுலாப் பயணிகள் மற்றும் சாரதி ஆகிய மூவரும் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button