வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவப் பொருவிழா இன்று (19) கொடியேற்றத்தொடு ஆரம்பமாகியது.


முருகப்பொருமானுக்கு அதிகாலையில் இருந்து சிறப்பு அபிசேக ஆராதனைகள் நடைபெற்று காலை மூர்த்திகளுக்கு வசந்த மண்டப பூசைகள் நடைபெற்றன.
அதனைத் தொடர்ந்து முருகப் விநாயகப் பெருமான், சிவன் உமாதேவியார் சமேதராயும்,வள்ளி தெய்வானை சமேதராயும் வசந்த மண்டபத்திலிருந்து கொடித் தம்பத்திற்கு எழுந்தருளி
கொடியேற்றம் சிறப்பாக நடைபெற்றது.


இன்று ஆரம்பமாகிய மாவை கந்தனின் வருடாந்த மகோற்சவ பெருவிழா, 25 நாட்கள் இடம்பெறவுள்ளது.
மகோற்சவப் பெருவிழாவில் எதிர்வரும் 11 ஆம் திகதி தேர்த் திருவிழாவும் 12 ஆம் திகதி ஆடி அமாவாசை தினத்தன்று கீரிமலை புனித தீர்த்தக்கரையில் தீர்த்த உற்சவம் சிறப்பாக நடைபெறவுள்ளது.



13ஆவது வாரமாக தொடரும் பலாலி மக்களின் காணிவிடுவிப்பு போராட்டம்!
பயணிகளோடு காணாமல் போன கப்பல் கண்டுபிடிப்பு: 140 பேர் மாயம் :ஒருவர் பலி!
செம்மணி மனிதப் புதைகுழிக்கு நீதி கோரி யாழில் ஆர்ப்பாட்டப் பேரணி!
ஆசிய மகளிர் உலக கிண்ண கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இலங்கை – இந்திய அணிகள் இன்று களத்தில்!