இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்படியில் ஈடுபட்ட 12 இந்திய மீனவர்கள் 3 படகுகளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காங்கேசந்துறை மற்றும் மன்னார் கடற்பரப்பில் வைத்து நேற்றிரவு(18) இவர்களை கைது செய்ததாக கடற்படை தெரிவித்துள்ளது.
மன்னார் கடற்பரப்பில் வைத்து படகொன்றில் 5 மீனவர்களும், காங்கேசந்துறை கடற்பரப்பில் இரு படகுகளுடன் 7 மீனவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதானவர்களை மன்னார் மற்றும் ஊர்காவற்றுறை நீதிமன்றங்களில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நன்னடத்தை பாதுகாவல் மற்றும் திணைக்கள உத்தியோகத்தர்கள் நியமனம்!
யாழ்.வல்லை வீதிவிபத்தில் ஆலய பூசகர் பலி!
டில்லு குழுவினருக்கு 9 ஆம் திகதிவரை விளக்கமறியல்!
அனோஜனுக்கு மன்னிப்பு வழங்க கோரி முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவுதி அரேபிய மன்னருக்கு கடிதம்!